பாலியல் வன்கொடுமை ,ஆட்கடத்தல் ,மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி , கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா. கோயில் கட்ட நிதி என்று கூறியும் , தன்னை நம்பிவந்தவர்களிடம் சித்துவேலைகளை காட்டி மோசடி செய்தும், அடித்துச் சென்ற பணத்தில் தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கைலாசா என்ற நாட்டை அறிவித்தார் நித்தியானந்தா.
கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது ,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் கிராப்பிக் செய்யப்பட்ட பின் திரைக்கு முன்னாக அமர்ந்ந்துக்கொண்டு தனது சீடர்களுக்கு ஆன்மீக சத்சங் என்ற யூடியூப் நேரலை சொற்பொழிவை பேசிவந்தார். இப்படி கொரோனா காலகட்டத்தில் நித்தியானந்தா அவரது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தது மிகபிரபலம் .
நித்தியின் இப்படி பட்ட பேச்சுகள் இணையத்தில் வைரலாகி கைலாசாவில் நித்தி ஜாலியாக இருக்கிறார் போல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையோ வேறு, இந்தியாவில் மோசடியில் ஈடுப்பட்டு தனது வருமானத்தை இழந்த நித்தியானந்தா அமெரிக்கா போன்ற 150 திற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளை மடங்களை பரப்பியிருந்தார்.ஆனால் அவர் ஏதிர்பார்தது போன்று வருமானம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை .
அத்துடன் இந்நியாவால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் பிற நாடுகளுக்கும் செல்லமுடியாமல் தனி தீவில் சிக்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். உப்புக்காற்று ,உணவு முறையில் மாற்றம் காலநிலை மாற்றம் என அனைத்தும் நித்தியானந்தா உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு நித்தியானந்தா உடல்நிலை நலிந்து எலும்பும் ,தோலுமாக படுக்கையில் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியானது.
Also Read : விடவே.. விடாதீங்க.. பப்ஜி மதனுக்கு “நோ ஜாமின்” - உயர் நீதிமன்றத்தில் கறார் காட்டிய போலீஸ்
அத்துடன் அவர் கைப்பட எழுதிய கையெழுத்து போட்டோவும் அவரது இணைய பக்கத்தில் வெளியானது .அதில் தன் கையெழுத்தை கூட நித்தியானந்த பிழையுடன் அடித்து எழுதியிருந்தார். பேனாவை பிடித்து எழுத முடியாத நிலையில் இருந்த நித்தியானந்தா படுத்த படுகையாக இருந்து வந்த நிலையில் தற்போது மீட்டும் தனது முகநூல் பக்கத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆறு மாதங்களாக தூக்கமில்லாமல் சிந்ந்தனையில் இருந்ததால் உடல் சோர்வடைந்து உள்ளதாகவும் ,எதையும் தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் எதை சாப்பிட்டாலும் உடனே வாந்திவருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் உதவியுடன் தான் , தான் சுவாசித்து வருவதாகவும் சில மணிநேரம் ஆக்சிஜன் உதவி இல்லாமல் சுவாசித்ததாகவும் பதிவிட்டுள்ளார். ஆக்சிஜன் உதவியுடன் படுக்கையில் இருக்கும் அளவிற்கு நுரையீரல் தொற்று ,கல்லீரல் தொற்று அவருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது. நோய் தொற்று தீவிரமாக உள்ளதால் தான் அவரால் அமர்ந்து பேச முடியாத நிலை உள்ளதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிகிச்சைக்காக வேறுஎங்கும் செல்லமுடியாமல் நித்தியானந்தா தவித்து வருவதாக சொல்லப்படுகின்றது. நித்தியானந்தா உடல்நலம் பெற அவரது சீடர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.