ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அப்படி ஒரு லவ்.. யாஷிகாவை பார்த்ததும் காதலில் உருகிய நிரூப்.. இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

அப்படி ஒரு லவ்.. யாஷிகாவை பார்த்ததும் காதலில் உருகிய நிரூப்.. இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

யாஷிகாவுடன் பிரேக் அப் ஆகிவிட்டதாக நிரூப் ஒருமுறை கூறி இருந்தார். ஆனால் இவர்களின் உரையாடலில் இன்னும் அந்த காதல் தெரிந்தது

யாஷிகாவுடன் பிரேக் அப் ஆகிவிட்டதாக நிரூப் ஒருமுறை கூறி இருந்தார். ஆனால் இவர்களின் உரையாடலில் இன்னும் அந்த காதல் தெரிந்தது

யாஷிகாவுடன் பிரேக் அப் ஆகிவிட்டதாக நிரூப் ஒருமுறை கூறி இருந்தார். ஆனால் இவர்களின் உரையாடலில் இன்னும் அந்த காதல் தெரிந்தது

 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் நடிகை யாஷிகா ஆனந்த் நிரூப்பை பார்க்க ஃபிரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே வந்து இருந்தார். யாஷிகாவை பார்த்ததும் நிரூப்பின் குணாதிசயம் அப்படியே மாறியது, காதல் வழிய வழிய யாஷிகாவிடம் பேசி மகிழ்ந்தது, பாப்பா பாப்பா என செல்லமாக அழைத்து கொஞ்சியது என பிக் பாஸ் வீட்டில் நிரூப் -யாஷிகாவுக்கு இடையே நடந்த அனைத்து க்யூட் மொமண்ட்ஸ்களும் ரீவைண்ட் மோடில் இணையத்தில் ரசிக்கப்படுகிறது.

  பிக் பாஸ் சீசன் 5ல் 81 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. டிக்கெட் டூ ஃபினாலி டாஸ்குக்கு முன்பு எல்லா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இந்த ஃபிரீஸ் டாஸ் நடைபெறும். போட்டியாளர்களின் குடும்ப உறவினர்கள் உள்ளே வந்து அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது வீட்டுக்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் முதல் நாளே அக்‌ஷரா அண்ணன் அம்மா, அடுத்தது சிபியின் அப்பா, மனைவி, ராஜூவின் அம்மா, மனைவி என ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்து சென்றனர். நேற்று முன் தினம் நிரூப்பின் அப்பா உள்ளே வந்தார்.

  நிரூப் மற்றும் அவரின் அப்பா இருவருக்குமான உரையாடல் வாரணம் ஆயிரம் படத்தை ஞாபகப்படுத்தியதாக பலரும் கூறி இருந்தனர். ஏன் பிக் பாஸ் போட்டியாளர் சிபியே கடைசியாக அப்படி தான் சொல்லி இருந்தார். அப்பாவிடமே தனது முன்னாள் காதலி யாஷிகாவை பற்றி நிரூப் கேட்டு இருந்தார். அவளின் உடல்நலம் எப்படி இருக்கு? நடக்கிறாளா? என்றெல்லாம் கேஷூவலாக நிரூப் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் நிரூப்புக்கு சர்ப்பிரைஸ் தர யாஷிகாவை பிக் பாஸ் குழு அ்ழைத்து வந்தது.

  பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு காரணமே இந்த 2 ஆண்கள் தான்!

  கார்டன் ஏரியாவில் கண்ணாடி குடுவைக்குள் இருக்கும் தங்க மீன் போல் யாஷிகா நிற்க, நிரூப் ஓடிச்சென்று கண்ணாடி மீது கை வைத்து கொண்டார். நிரூப்பின் கண்ணில் அப்படி ஒரு காதல். யாஷிகா,  “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் உனக்காக தான் இங்கே வந்தேன். நீ நன்றாக விளையாடுகிறாய். உன்னை தினமும் பார்க்கிறேன். இப்படியே விளையாடு. நீ இதற்குதானே ஆசைப்பட்டாய். அந்த பேரு, புகழ் உனக்கு கிடைத்து விட்டது. எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

  இதையும் படிங்க.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

  உடனே நிரூப், “பாப்பா உன்னால் தான் நான் இங்க இருக்கேன். நீ தான் காரணம். நீ முதல்ல உட்கார்ந்து பேசு. எப்படி இருக்கு உன் கால்” என கண்ணீல் லவ்வுடன் பேச மொத்த ஹவுஸ்மேட்ஸூம் நிரூப் உனக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?என ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதுமட்டுமில்லை நிரூப் யாஷிகாவுடன் தனியாக பேசட்டும் என ஸ்பேஸ் கொடுத்து சென்றனர். அதற்குள் யாஷிகா வந்த நேரம் முடிய, நிரூப்புக்கு அவரை பிரிய மனசே இல்லை. கண்ணாடியை தொட்டு தொட்டு பார்த்து முத்தம் கொடுத்தார்.

  ' isDesktop="true" id="648185" youtubeid="_ilMkmjFC3M" category="tamil-nadu">

  யாஷிகாவுடன் பிரேக் அப் ஆகிவிட்டதாக நிரூப் ஒருமுறை கூறி இருந்தார். ஆனால் இவர்களின் உரையாடலில் இன்னும் அந்த காதல் தெரிந்தது. இதை பார்த்து பிரியங்காவின் முகம் மாறியதும் கவனிக்க முடிந்தது. கடைசி நொடி கதவு மூடும் வரை நிரூப் கீழே குனிந்து கொண்டே யாஷிகாவை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருமுறை கூட யாஷிகாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை என வருத்தம் வேற. பாத்ரூமில் நீருப் துள்ளி குதித்து வழிந்தது எல்லாமே கட் செய்யாமல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் வைரலாகப்பட்டு வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: