ஜாதி, மதத்தால் மக்களை வேறுபடுத்திய கட்சிகளுக்கு மத்தியில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டத்தால் உங்கள் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • Share this:
2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னையில் தொழிலதிபர்கள்  வியாபாரிகள் ஆகியோருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொய்ப்பிரசார அரசியல் இங்கு அதிகளவில் செய்கிறார்கள்.வேளாண் சட்டத்தால் உங்கள் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாடுகளை அழைத்துச் சென்று விடுகிறார்களா? விவசாயிகளிடம்தானே மாடு உள்ளது? தற்போது பால் உற்பத்தியில் இந்தியாதான் நம்பர்-ஒன் நாடாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. விவசாயிகளுக்காக இங்கு அரசியல் கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதில், “இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்களை பேச்சுவார்த்தை மூலம் மீட்டவர் மோடி. தமிழகத்தில் இருந்து ஒரு பாஜக எம்.பி கூட இல்லாவிட்டாலும் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. தமிழகத்திற்கு சைனிக் பள்ளிகள் கொண்டு வரப்படும். தமிழகம் வளர்ச்சி பெற நல்லாட்சி கிடைக்க வேண்டும்.விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் யார்?போராட்டக் களத்துக்கு சென்று ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரென்றால் இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு சென்று கொள்முதல், பொது விநியோகத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உலக வர்த்தக சட்டத்தில் கையெழுத்திட்ட 2013 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தவர்கள்தான் என்று கூறியுள்ளார்.

”அறமில்லாத அரசியல் நடத்தி, நாத்திகத்தை வளர்த்து, ஜாதி மதத்தால் மக்களை வேறுபடுத்திய கட்சிகளுக்கு மத்தியில் தமிழகத்தில்,பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது” என்றும் பேசியுள்ளார்.
Published by:Gunavathy
First published: