ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேசமுடியவில்லை - நிர்மலா சீதாராமன் வேதனை

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேசமுடியவில்லை - நிர்மலா சீதாராமன் வேதனை

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேசமுடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  துக்ளக் இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ’உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி. வடமாநில கட்சி என்று பா.ஜ.க குறித்து தவறான கருத்து தமிழகத்தில் பரப்பப்படுகின்றது.

  கடந்த 10ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இந்தியா பல மடங்கு வளர்சியடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என சர்வதேச நிதி முகமை தெரிவிக்கிறது. தடுப்பூசி மீது அவநம்பிக்கையும் தயக்கத்தையும் ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி.

  காங்கிரஸ் தலைமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

  இந்த நாட்டுக்கு எதிராக போராடும், உடைக்கும் சக்திகளோடு காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. நேரு காலத்தில் சீனா, அசாம் மீது போர் தொடுத்த போது நேரு அசாம் மக்களை காக்க தவறிவிட்டார். நாட்டில் பாரத ஸ்டேட் வங்கி போன்ற பெரிய வங்கிகள் தேவை.

  ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய கட்சிகள் கண்டிபாக தேவை. தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு எதிராக செயல்பட கூடிய கட்சி காங்கிரஸ். மாதந்தோறும் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. 60 ஆண்டுகாலம் சோசியலிசம் என்ற பெயரில் மக்களுக்கு காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை. காங்கிரஸ் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது மக்களின் துரதிருஷ்டவசம். நலத்திட்டங்களை சிலருக்கு கொடுத்துவிட்டு சிலருக்கு கொடுக்காமல் விடுவது திராவிட மாடல்.

  மத்திய, மாநில அரசுக்கு இடையே சுமூக உறவில்லை என்றும் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று பொய் பிராசாரம் செய்கிறார்கள். அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கின்றனர். பிரிவினைவாத மனநிலை கொண்டதால் தான் இப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை.. குருமூர்த்தி

  பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்கள் ஜி.எஸ்.டியிலிருந்து மத்திய அரசின் பங்குதொகை தமிழகத்திற்கு வழங்கவேண்டியுள்ளது. விரைவில் அது வழங்கப்படும். ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை.

  திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Hindi, Nirmala Sitharaman