பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
டிடி தொலைக்காட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறினார். உள்கட்டமைப்பில் ஒரு ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ரூபாய் 45 பைசா அளவுக்கு ஒரு வருடத்தில் பயன் ஏற்படுவதாகவும் விளக்கமளித்தார். கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சி வழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு இத்தனை வயதா? எனது அம்மா நம்பவில்லை - மேடையை கலகலப்பாக்கிய ராகுல் காந்தி
மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய நிதி உதவி அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து தொழில்துறையினர் மற்றும் செய்தியாளர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் எரிபொருள் விலையேற்றத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.