Home /News /tamil-nadu /

#Exclusive | நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்! பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பெருமிதம்

#Exclusive | நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்! பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது என்று நியூஸ்18 செய்திக் குழுமத்துக்கு அளித்தப் பேட்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவருடைய பட்ஜெட்டை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. இந்தநிலையில், நியூஸ்18 செய்திக்குழுமத்துக்கு பட்ஜெட் தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

அவருடைய பேட்டியில், ‘சமூகத்தின் எல்லா தரப்பினருடைய வாங்கும் திறனை அதிகரிக்கவும், பணத்தை முதலீடு செய்வதற்கும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.  மக்களின் முதலீட்டைக் குறைப்பதை விரும்பவில்லை. அதனை அதிகரிக்கவே விரும்புகிறோம்.

நுகர்வு திறனை அதிகரிப்பதையும், முதலீடு அதிகரிப்பதையும் உறுதிப்படுத்தும் காரணிகளை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. பணம் முதலீட்டுக்குச் செல்வதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். திங்களன்று பங்குச் சந்தைகள் நேர்மறையான அறிகுறியை வெளிப்படுத்தும்.

எதிர்மறையான எண்ணத்துடன் பேசும் பொருளாதார வல்லுநர்கள் தூரம் செல்லவேண்டும். தற்போது, நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தேவைகளை நாங்கள் புறக்கணிக்கவில்லை. பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கக் கூடிய நடவடிக்கைகள் தேவைகள் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் விவசாயம் மற்றும் கிராமப் புற மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதாரச் சூழலில், நான் அதிகம் செலவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். அதனை செய்யமுடியாது. எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் எஸ்கேப் கிளாஸைப்(Escape clause)(நிதிப்பற்றாக்குறைக்காக பயன்படுத்தப்படும் ஒரு சட்டவழிமுறை) பயன்படுத்தாமல் என்னால் அதனைச் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.

 

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Budget 2020, Nirmala Sitharaman

அடுத்த செய்தி