பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரையில் விசாரணை நடைபெறாது! நிர்மலா தேவி வழக்கறிஞர் காட்டம்

Web Desk | news18
Updated: September 16, 2019, 10:30 PM IST
பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரையில் விசாரணை நடைபெறாது! நிர்மலா தேவி வழக்கறிஞர் காட்டம்
நிர்மலா தேவி கோர்ட்டில் ஆஜராக வந்தபோது.
Web Desk | news18
Updated: September 16, 2019, 10:30 PM IST
பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருக்கும் வரையில் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது என்று நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, ஆகியோர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். உதவி பேராசிரியர் முருகன் இன்று ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் 27-ம் தேதி ஆஜராகும் படி உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், நிர்மலா தேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருப்பதாக தெரிவித்தார்.


பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருக்கும் வகையில் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...