மொட்டைத் தலையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி!

கடந்த ஒரு வாரமாக அவருக்கு நெல்லை தனியார் காப்பகத்தில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

Web Desk | news18-tamil
Updated: August 5, 2019, 10:17 PM IST
மொட்டைத் தலையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி!
நிர்மலா தேவி
Web Desk | news18-tamil
Updated: August 5, 2019, 10:17 PM IST
மனநல சிகிச்சைக்குப் பிறகு பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி தலைமுடியை வெட்டி கொண்டு நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

வழக்கறிஞர்கள் அவரை சமாதனப்படுத்தி அனுப்பிய நிலையில், தர்காவிற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அவருக்கு நெல்லை தனியார் காப்பகத்தில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி, வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார்.

உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு வைத்தி வைத்தார்.

Also watch: சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க!

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...