கேரளாவில் நிபா வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், அதையொட்டியுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில், கண்காணிப்புக் குழு அமைக்க தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தை ஒட்டியுள்ள, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு குழுக்களை அமைக்குமாறு சுகாதார இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதார இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சோதனையின் போது நிபா அறிகுறிகளான காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இருந்தால், உடனடியாக அந்த நபரை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் 37 வழித்தடங்களில், களியக்காவிளை, நெட்டா மற்றும் காக்கவிளை ஆகிய 3 பகுதிகளில் மட்டுமே சோதனை நடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸ் தொடர்பாக சிறப்பு சோதனை ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read : நிபா வைரஸ் அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?
இதனிடையே, நிபா வைரஸ் காரணமாக கேரளா - தமிழகம் இடயேயான போக்குவரத்து ரத்து செய்யப்படாது என, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். வரும் 12ம் தேதி கேரள எல்லை மாவட்டங்களில் மட்டும் 10 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Nipah Virus