நீலகிரி வெள்ளம்: மு.க.ஸ்டாலின் மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

மழையின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதற்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

நீலகிரி வெள்ளம்: மு.க.ஸ்டாலின் மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
  • Share this:
நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் காரணங்களுக்காகவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

மழை பாதிப்பு குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகளுடன் உதகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த உடனே தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான் பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் மழையின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதற்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Also Watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்