ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நிலம் தேர்வு செய்வதில் சிக்கல்...!

நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நிலம் தேர்வு செய்வதில் சிக்கல்...!

உதகை (கோப்புப்படம்)

உதகை (கோப்புப்படம்)

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரி ஏற்கெனவே மாவட்ட தலைநகரில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் இருந்து 10கி.மீ எல்லைக்குள் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் உதகமண்டத்தில் அரசு மருத்துவமனை அமைந்திருக்கும் இடத்திலிருந்து 10 கி.மீ எல்லைக்குள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு பொருந்தக் கூடிய வருவாய் நிலங்கள் இல்லை என்பதா,ல் 6 கி.மீ தொலைவில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான 10.12 ஏக்கர் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த 25 ஏக்கர் வனப்பகுதிக்குப் பதிலாக  கூடலூர் தாலுகாவில் 50 ஏக்கர் வருவாய் நிலமானது நீலகிரி மாவட்ட ஆட்சியரால் வனத்துறைக்கு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து இந்த 25 ஏக்கர் வனப்பகுதியை 100ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வனத்துறை அனுமதி கோரி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விண்ணப்பம் செய்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை  தமிழ்நாடு வனத்துறையானது மத்திய வனத்துறை அனுமதிக்காக பரிந்துரையும் செய்தது. பரிசீலனையின் போது மருத்துவக் கல்லூரி அமைக்க வனம் இல்லாத வேறு மாற்று இடங்களே கிடைக்கவில்லயா? என்றும் மாற்று நிலமாக கூடலூரில் வழங்கப்படும் 50 ஏக்கர் நிலத்தில் தேயிலைப் பயிர்கள் வளக்கப்பட்டு வருவதாலும் அந்த நிலமே யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்தும் கூடுதல் தகவல்களை வழங்குமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தது.

வனத்துறையின் அனுமதியை விரைவாக பெறும் நோக்கில் மாற்று இடமாக கூடலூரில் உள்ள நிலத்தை ஒதுக்குவதில் சிக்கல் இருந்ததால் சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகாவிற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் உள்ள 20.24 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்க முடிவு செய்து மத்திய வனத்துறை அனுமதிகோரி மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க கனமழை பெய்யும் காலங்களில் எல்லாம் நீலகிரியில் நிலச்சரிவுகள் அதிகளவில் ஏற்படுகின்றன. வனப்பகுதியை அழித்து அங்கு கட்டுமானங்கள், சாலைகள் அமைக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் 25 ஏக்கர் வனப்பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு முடிவு செய்திருப்பது மேலும் பாதிப்புகளை உண்டாக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Published by:Sankar
First published:

Tags: Nilgiris