வரலாற்றில் 2-வது முறையாக மூடப்பட்ட உதகை அரசு தாவரவியல் பூங்கா...

உதகை அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

  • Share this:
உதகமண்டலத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, அதன் வரலாற்றில் இரண்டாம் முறையாக மூடப்பட்டுள்ளது. அதேபோல ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் யாரும் அனுமதிக்கப்படாததால் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வரலாற்றில் இரண்டாவது முறையாக மூடப்பட்ட உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து அதனை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா  படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தங்களை கண்டு ரசிப்பார்கள்.

மேலும் வன விலங்குகளை காணவும் யானை சவாரி செய்யவும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு செல்லவும் ஆர்வம் காட்டி வருவார்கள். இந்நிலையில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாக அறிவித்தது.

மேலும் படிக்க... ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று

இந்நிலையில் இன்று முதல் உதவி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் முதுமலை புலிகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கால்பதித்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.  சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால்  தமிழ்நாடு, கேரளா கர்நாடகா போன்ற சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைவதோடு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன்காரணமாக சுற்றுலாவை மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: