• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரமாக சுயநினைவின்றி கிடந்தவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரமாக சுயநினைவின்றி கிடந்தவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

நீலகிரியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச்சென்ற பிக்கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரமாக சுயநினைவை இழந்த நிலையில் கிடந்துள்ளார் ஓட்டுனர் அபிலாஷ்.

  • Share this:
    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுனர் அபிலாஷ். இவர் நேற்று மாலை உதகையில் இருந்து கேரட் போன்ற உள்ளிட்ட மலை காய்கறிகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கீழ் நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் வயநாடு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தமிழக எல்லைப் பகுதியான கீழ்நாடுகாணி  அருகே காய்கறி ஏற்றி சென்ற வாகனம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வாகனம் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற  கவிழ்ந்தது. இதில் வாகன ஓட்டுனர் அபிலாஷ், விபத்துக்குள்ளாகிய பிக்கப் வாகனத்திலிருந்து  தூக்கி வீசப்பட்டார். இதனால் மூச்சு பேச்சின்றி சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் கிடந்த அபிலாஷ், குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுனர் மரக்காணம் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது சுயநினைவை இழந்து மயக்க நிலையில் கிடந்த ஓட்டுனர் அபிலாஷ் நிலையைக் கண்ட ஆய்வாளர் மற்றும் மரக்காணம் என்பவர்  Cpr சிஸ்டம் மூலம் மயக்க நிலையில் கிடந்த ஓட்டுனரின் மார்பை நன்கு அழுத்தி மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

    Read More:    கொரோனாவை குணப்படுத்தும் ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் ‘அதிசய’ மூலிகை மருந்து!

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள்,  சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு மணி நேரமாக உயிரிழந்ததாக கருதப்பட்ட ஓட்டுநரை உயிர் பிழைக்க வைத்த தமிழக காவல் ஆய்வாளர் மற்றும் வாகன ஓட்டுநர் மரக்காணம் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    நீலகிரி செய்தியாளர் வில்லியம்ஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: