குடியிருப்பு பகுதிகளில் குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள் - குன்னூர் மக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதிகளில் குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள் - குன்னூர் மக்கள் அச்சம்
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகளால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றது.இந்த யானை கூட்டம் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
குன்னூர் அருகே இருக்கும் ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளதுடன் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றிதிரிகின்றன.நேற்று அதிகாலை குன்னூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இரு குட்டிகளுடன் சுற்றி திரியும் யானை கூட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு பகல் பாராமல் தேயிலை எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் காட்டு யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.