• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கை மீறி குவிந்த வாகனங்கள்: அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட நீலகிரி ஆட்சியர்!

ஊரடங்கை மீறி குவிந்த வாகனங்கள்: அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட நீலகிரி ஆட்சியர்!

வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்,

வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்,

ஊரடங்கை மீறி ஏராளமான வாகனங்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்வதாக கூறி இன்று வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • Share this:
    உதகையில் ஊரடங்கை மீறி ஏராளமான வாகனங்கள் குவிந்ததால் மாவட்ட ஆட்சிதலைவரே களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் வாகனங்களில் ஓட்டியிருந்த போலி ஸ்டிக்கர்களை அகற்றி பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

    தமிழகத்தில்  ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லா ஊரங்கு அமல்படுத்தபட்டுள்ளது. காய்கறி, பால் உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் ஊரடங்கை மீறி ஏராளமான வாகனங்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்வதாக கூறி இன்று வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது ஏராளமானோர் தேவையின்றி வாகனங்களில் வந்தது தெரிய வந்தது. மேலும் வாகனங்களில் ஓட்டியிருந்த போலி ஸ்டிக்கர்களையும் அகற்ற கூறியதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவையை தவிர மற்றவர்கள் வெளியில் வருவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

     

    நீலகிரி செய்தியாளர் வில்லியம்ஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: