உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
ஒரு வழிப்பாதையாக மாற்றம்
கோடை சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கோடை சீசன் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளதையடுத்து மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதகை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை நாளை மறுநாள் 16ந் தேதி முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு S.P. அம்ரித் கூறினார்.
உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படும் என்றும், சரக்கு வாகனங்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே இப்பாதைகளில் அனுமதிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இருப்பினும் அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் தடையின்றி வரலாம் என்றும் அவர் கூறினார் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள் சீல் வைக்கப்பட உள்ளதாகவும் இதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் கல்லார் குஞ்சப்பண்ணை, நாடுகாணி, கக்கனல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக வரும் அனைத்து சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தாவிலிருந்து குளிச்சோலை, புதுமந்து வழியாக உதகை நகரத்தினுள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார் .
-செய்தியாளர்: யோகேஸ்வரன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.