நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாபெரும் சுற்றுலா மாவட்டமாகும். இங்கு ஆண்டிற்கு சுமார் 30-லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க தனியார் சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலா வாகன ஓட்டிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் என அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் கூட்டி செல்வார்கள்.
இந்த தொழிலை நம்பி சுமார் 5000-க்கும் அதிகமான சுற்றுலா வாகன ஓட்டிகள் உள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோக்களில் நிர்ணயக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வது, சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறையை மீறி வாடகைக்கு விடுவது மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களில் மாவட்டத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து வருவதாகவும் மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தினால் மாவட்டத்தில் சுமார் 5000-க்கும் மேற்ப்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.