நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யபட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்ட மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்ல எந்த தடையும் கிடையாது.

  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை ( 05-07-21) திறக்கப்படாது என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. இதனால் நாளை காலை 6 மணி முதல் பொதுபோக்குவரத்து தொடங்குகிறது.

குறிப்பாக இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யபட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்ட மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்ல எந்த தடையும் கிடையாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் ஊரடங்கு தளர்வில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து தெளிவான அறிவிப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களை திறப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Also read: கோவையில் கேமரா வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமராவை திருடி சென்ற இளைஞர்!

இதனால் நாளை (05-07-21) நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கபடுவதில்லை என மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலா தலங்கள் குறித்து தமிழக அரசிடம் முறையாக ஆலோசனை கேட்ட பிறகு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published: