• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேற்றில் சிக்கித் தவித்த கர்ப்பிணி யானையை அடித்துக் கொன்ற புலி!

சேற்றில் சிக்கித் தவித்த கர்ப்பிணி யானையை அடித்துக் கொன்ற புலி!

கர்ப்பிணி யானையை அடித்துக்கொன்ற புலி

கர்ப்பிணி யானையை அடித்துக்கொன்ற புலி

சிங்காரா மின்நிலையம் அருகே உள்ள கரியமாளா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்ததை கண்டுள்ளனர்.

  • Share this:
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் சேற்றில் சிக்கித் தவித்த 15 வயது கருவுற்ற பெண் காட்டு யானையை புலி அடித்து கொன்ற சம்பவம் வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வர தொடங்கி உள்ளன.

அவற்றை கண்காணிக்க வனத்துறையினர் தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல சிங்காரா மின்நிலையம் அருகே உள்ள கரியமாளா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக வனச்சரகர் காந்தன் மற்றும் துணை கள இயக்குனர் ஸ்ரீகாந்திற்கு தகவல் தெரிவித்தனர்.

முதுமலை கால்நடை மருத்துவருடன் அங்கு சென்ற வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அந்த பெண் யானை கருவுற்று இருந்ததும், சேற்றில் சிக்கி வெளியில் வர முடியாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்த போது புலி அந்த யானையை அடித்து கொன்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: