• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடிய T23 புலி : நம்பிகுன்னு வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணி

மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடிய T23 புலி : நம்பிகுன்னு வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

போஸ்பாரா பகுதியில் மயக்க ஊசி செலுத்தியும் தப்பிய T23 புலி, புதர் பகுதிக்குள் மறைந்து கொண்டது.

  • Share this:


முதுமலை வனப்பகுதியில் நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற  T23 புலி, 19ஆவது நாளாக தேடப்பட்டு வருகிறது. போஸ்பரா பகுதியிலிருந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் அந்த புலியின் நடமாட்டம் இருப்பது தானியியங்கி கேமராவில் பதிவானதை தொடர்ந்து வனத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

19-வது நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் T23 என்றழைக்கப்படும் புலி, நேற்று முதுமலை போஸ்பரா வனப்பகுதியில் கண்டறியப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கி சென்றது. மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் வேட்டை முடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் புலி நடமாடும் வனப் பகுதிக்கு விரைந்துள்ளனர். இதனால் போஸ்பரா மற்றும் நம்பிகுன்னு பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன், மசினகுடி பகுதிகளில் 4 பேரை பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் 5 நாட்களாக புலியின் கால் தடங்கள் தெரியாமல் சிங்கார வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் புலியை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் ஏமாற்றமடைந்தனர்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் முதல் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மற்றும் மாயார் பகுதிகளில்  நான்கு குழுக்கள் அந்த இரண்டு வனப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள முட்புதர்கள் போன்றவை மட்டுமின்றி மூங்கில் புதர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் 65 இடங்களில் வைக்கப்பட்ட தானியங்கி சென்சார் கேமராக்களில் இந்த புலி பதிவாக நிலையில் நேற்று காலை கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் கண்காணிப்பு கேமிராவில் சிக்கியது.

நம்பிகுன்னு வனப் பகுதியில் தேடுதல் வேட்டை.


உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களை வனப்பகுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நேற்று 2 மணியளவில் அத்திகுன்னு மற்றும் முதுகுழி வனப்பகுதியில் புலி தென்ப்பட்டதால் அப்பகுதிகளுக்கு 4 வன கால்நடை மருத்துவர் குழு மற்றும் வனதுறையினர் விரைந்தனர்.

Must Read : ஒருமணி நேரத்தில் 47 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

மாலை 5 மணிக்கு புலியை சுற்றி வலைத்த வனத்துறையினர். புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனால் அதிலிருந்து புலி தப்பி அருகில் இருந்த புதர் பகுதிக்கு சென்று மறைந்துக்கொண்டது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் பணி நிறைவடைந்தது. இந்நிலையில், பொதுமக்கள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: