முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் தொடங்கியது உறைபனி

உதகையில் தொடங்கியது உறைபனி

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :

உதகையில் உறைபனி பொழிவு தொடங்கியதால் அதிகாலை நேரங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளிக்கும் புல்வெளிகள். கடுங்குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் பனிபொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி பொழிவு காணப்பட்டது. உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புள்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது.

குறிப்பாக காந்தள், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது படிந்திருந்தது. இதனால் உதகையில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் சுவட்டர், தொப்பி போன்ற  உடைகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

Also read... ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்

ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வைத்திருந்தால் நடவடிக்கை

Ration shop : தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது - முழு விவரம்

இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கடுங்குளிர் காரணமாக உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இன்று அதிகாலை 4 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

First published:

Tags: Ooty