• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T 23 புலியை ஆட்கொல்லி புலியாக  எடுத்து கொள்ள முடியாது: முதன்மை வன உயிரின பாதுகாவலர்!

T 23 புலியை ஆட்கொல்லி புலியாக  எடுத்து கொள்ள முடியாது: முதன்மை வன உயிரின பாதுகாவலர்!

புலி

புலி

புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக  பாதிக்கப்படும் என்பது உண்மை என்றபோதிலும்  அதை சரி செய்து விட முடியும் எனவும், வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய  புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • Share this:
முதுமலை வனப்பகுதியில் தேடப்பட்டு வரும் T 23 புலியை ஆட்கொல்லி புலியாக  எடுத்து கொள்ள முடியாது எனவும், ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்கள்  இருக்க வேண்டும் எனவும் இந்தப்புலி அப்படி இல்லை என தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் T23 புலியை பிடிக்கும் பணி 12 வது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை பார்வையிட்ட பின்னர்  தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது , ‘T23 புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும்,தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி T23 புலியை பிடிக்க முயன்று வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

T 23 புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும்,சிங்காரா வனப்பகுதியில் T23 புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தி இருக்கின்றோம் எனவும் கூறிய அவர்,  காட்டில் T23 புலியின்  வயது காரணமாக அதற்கு வேட்டையாடுவதில்  சிரமங்கள் இருக்கின்றது என தெரிவித்தார்.

சிங்காரா வனப்பகுதியில் பரண்கள்  அமைத்து புலியை கண்காணித்து வருவதாகவும், அந்த பகுதியில் எந்தவித  இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவித்தார். மன்றாடியார் வனப் பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றது என குறிப்பிட்ட அவர்,தெர்மல் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: தமிழக நீர்நிலைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!


மேலும்,  “அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 6 மருத்துவ குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; இந்த T 23  புலியை  ஆட்கொல்லி என சொல்ல முடியாது . ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்கள் இருக்க வேண்டும். இந்தப்புலி அப்படி இல்லை என்பதால் இதை ஆட்கொல்லி புலியாக  எடுத்து கொள்ள முடியாது” என்று விளக்கமளித்தார்.



புலியை மயக்க ஊசி செலுத்தி  பிடித்து அதை மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்யப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.இந்த புலியால் ஏற்பட்ட 4  மரணங்களில் முதல் இரு மரணங்கள் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்த வில்லை எனவும் இதற்கு டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும்  அவர் கூறினார்.

மேலும் படிங்க: T23 புலியை பிடிக்க 12வது நாளாக தேடுதல் முயற்சி!


புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக  பாதிக்கப்படும் என்பது உண்மை என்றபோதிலும்  அதை சரி செய்து விட முடியும் எனவும், வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய  புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்த அவர்,  ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது என கூறினார்.

தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்ளபோவதாகவும் T23 புலியை மயக்க மருந்து கொடுத்து பிடித்த பின்னர்,அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவகுழுவினர் முடிவு செய்து சொல்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக  டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், காடுகளில் வாழும் புலி14 வருடங்கள் வரை இருக்கும், ஆனால் வன  உயிரின பூங்காகளில் அடைத்து அவற்றை பாதுகாக்கும்  போது கூடுதலாக 10 ஆண்டுகள் புலி உயிருடன் இருக்கும் என்று தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்   தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: