• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர்; கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்த கொடூரம்!

பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர்; கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்த கொடூரம்!

பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர்: உதகையில் கொடூரம்!

பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர்: உதகையில் கொடூரம்!

மாகியின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று உடலை பார்த்த போது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

  • Share this:
உதகையில் 53 வயது பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை கியூ பிரிவு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருபவர் முஸ்தபா. 55 வயதான முஸ்தபாவிற்க்கும் உதகை காந்தல் புது நகர் பகுதியை சேர்ந்த 53 வயதான மார்கிரேட் என்ற மாகிக்கும் 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மாகியை சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா அழைத்து சென்றுள்ளார். நேற்று இரவு மாகி வீட்டிற்கு திரும்பி வராத நிலையில் இன்று காலை கொரோனா தொற்றால் மாகி இறந்துவிட்டதாக கூறிய முஸ்தபா அவரது உடலை காந்தல் பகுதிக்கு எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் உறவினர்களிடம் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யுமாறும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாகியின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று உடலை பார்த்த போது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் உடனடியாக உதகை ஜி1 காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மாகியின் வீட்டிற்கு சென்ற போலிசார் அவரது உடலை பிரேத பரிசோதனைகாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Also read: சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு கொரோனா தொற்று; சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!

இதனிடையே சப்- இன்ஸ்பெக்டர் முஸ்தபாவை பிடித்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்பு தான் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: