• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive | ஆன்லைன் வகுப்புக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் மாணவர்களின் திகில் பயணம்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Exclusive | ஆன்லைன் வகுப்புக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் மாணவர்களின் திகில் பயணம்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!

  
காட்டுக்குள் ஆன்லைன் வகுப்பில் பயிலும் மாணவர்கள்

காட்டுக்குள் ஆன்லைன் வகுப்பில் பயிலும் மாணவர்கள்

அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் போது யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை இருப்பதாகவும், யானைகள் சத்தம் கேட்டால் உடனடியாக வகுப்பில் கலந்துகொள்ளாமல்  ஊருக்கு வந்து விடுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்

  • Share this:
    குன்னூர் அருகே பர்லியாறு எனும் மலை கிராமத்தில்  மொபைல் நெட்வொர்க் முழுமையாக கிடைக்காமல் அவதியுறும்  மாணவ மாணவிகள் ஒரு கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பாடம் பயின்று வரும் அவலம் அரங்கேறி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது பர்லியாறு என்னும் மலை கிராமம். குன்னூரில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் உள்ளது.. இந்த மலை கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. யானை , சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குள் அதிகம் உள்ள வனப்பகுதி இதுவாகும். உதகையில் இருந்து சமவெளி பகுதிக்கு  செல்லும் பேருந்துகளும் , சமவெளி பகுதிகளிலிருந்து உதகைக்கு வரும் பேருந்துகளும் நிற்கும் முக்கிய  இடத்திற்கு அருகே அமைந்துள்ளது இந்த கிராமம்.

    இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருந்து வருகின்றனர். குறிப்பாக சாலைகளில் தேனீர் கடைகள், இனிப்பு வகைகள், பழங்கள் விற்கும் வியாபாரிகள் இங்கு அதிகமானோர் இருந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் படிக்க வைக்க வேண்டுமென்றால் மேட்டுப்பாளையம்  அல்லது குன்னூர் செல்ல வேண்டும். இவ்வாறு இருக்க கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும்  ஆன்லைனில் தான் வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

    Also Read:   வீட்டுக்கு வந்த மகளின் பாய் ஃபிரண்டை கட்டி வைத்து அடித்தே கொன்ற தந்தை! - உதவிய நண்பருக்கு சிக்கல்..

    அனைத்து மாணவ மாணவிகளும் ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற்று வரும் நிலையில் பர்லியாறு ஆதிவாசி கிராம மக்களின் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சரிவர மொபைல் நெட்வொர்க் கிடைக்காத நிலையில் இவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம்  அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பாடம் பயிலும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    குன்னூர் அருகே உள்ள பகாசுரன் மலையில் அமைந்துள்ள ஒரே ஒரு பிஎஸ்என்எல் டவர் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். ஆனால் அதுவும் தொலைபேசியில் பேசுவதற்காக மட்டுமே உதவும் . நெட்வொர்க் கிடைப்பதில் பெரும் சிரமமாகும், சவாலாகவும் உள்ளது. இருப்பினும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் ஒற்றையடி பாதையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பாடம் பயின்று வருகின்றனர்.

    Also Read:   பிட்ச்சில் நடனமாடி பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய வங்கதேச பேட்ஸ்மேன்.. டெஸ்ட் மேட்ச்சில் சுவாரஸ்யம்..!

    குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்ல பெரும்பாலும் மாணவிகளை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. இவர்கள் மேட்டுப்பாளையம் சென்று பயின்று வருகின்றனர். மாணவர்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் சென்று பாடங்களை கற்று வீடு திரும்புகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படி அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் போது யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை இருப்பதாகவும், யானைகள் சத்தம் கேட்டால் உடனடியாக வகுப்பில் கலந்துகொள்ளாமல்  ஊருக்கு வந்து விடுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கான பர்லியார் பகுதியில் ஒரு செல்போன் டவர் அமைத்து தர வேண்டும் என்பதே இந்த மாணவ-மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர் வில்லியம்ஸ்,  நீலகிரி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: