• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T23 புலியை பிடிக்க உதவிய பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரிக்கை

T23 புலியை பிடிக்க உதவிய பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சுற்றித்திரிந்த டி-23 புலியை பிடிப்பதற்கு முக்கிய பங்காற்றிய பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட புலிகள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள புலிகளை டி1, டி2 என்ற வரிசையாக பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அந்த வரிசையில் டி23 என்ற பெயர் கொண்ட புலி வயது முதிர்வால் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் புகுந்து 4 பேரை அடித்துக் கொன்றதுடன், ஏராளமான கால்நடைகளை கொன்றது.

    கூடலூர் அருகே ஸ்ரீமதுரை, தேவன் எஸ்டேட், போஸ்பரா மற்றும் மசினகுடி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முப்பதிற்கும் மேற்பட்ட கால் நடைகளையும், கெளரி, குஞ்சுகிருஷ்ணன், சந்திரன், மங்கள பசுவன் என நான்கு மனித உயிர்களையும் அடித்து கொன்ற T23 என்றழைக்கப்படும் இந்த புலியானது கடந்த 21 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்தது.

    குறிப்பாக கடந்த மாதம் 24ஆம் தேதி கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவரை அடித்துக் கொன்றது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தொடர்ந்து 8 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புலியை உடனடியாக பிடிப்போம் என நம்பிக்கையை வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனடிப்படையில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் இந்த புள்ளியை தேவன் எஸ்டேட், தேவர்சோலை, உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி வந்தனர். தொடர்ந்து வனத்துறையினருக்கு இந்த புலி போக்குக் காட்டி வந்தது. இந்நிலையில் கடந்த 1- தேதி மசினகுடியில் மங்கள பசுவன் என்பவரை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்து புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . இதையடுத்து கண்டிப்பாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்தனர் அன்று முதல் தொடர்ந்து T23 புலியை தேடிவந்தனர் .

    இந்த புலியை பிடிக்க 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கேரள வனத்துறையினர், 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், 100-க்கும் மேற்ப்பட்ட தானியங்கி கேமராக்கள், 4 டிரோன் கேமிராக்கள் என பலரும் இந்த புலியை தேடி வந்தனர். ஆனால் புலி தொடர்ந்து கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. கடந்த 6ஆம் தேதி ஒரு முறையும் கடந்த 13-ஆம் தேதி ஒரு முறை என இரண்டு முறை மட்டுமே தென்பட்டது. தொடர்ந்து மசினகுடி பகுதியில் தேடி வந்த வனத்துறையினர் 15ஆம் தேதி மசினகுடி வாகன சோதனை சாவடி அருகே சாலையைக் கடப்பது கண்டு தொடர்ந்து அந்த புலியை அப்படி வனப்பகுதி அருகே சுற்றிவளைத்தனர் . உடனடியாக சம்பவ இடத்திற்கு சீனிவாசன், உதயன் என்ற கும்கிககள் வரவழைக்கப்பட்டது.பின்னர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு பின்னர் மசினகுடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு, தமிழகத்தில் முதன் முதலாக உயிருடன் பிடிக்கப்பட்டது.

    இந்த T23 புலியை பிடிப்பதற்கு முக்கிய பங்கு வகித்தது, வேட்டை தடுப்பு காவலர்களாகிய ஆதிவாசி பழங்குடியின இளைஞர்கள் என்றால் அது மிகையாகாது. இந்த ஆட்கொல்லி புலியை கடந்த 21 நாட்களாக இரவு, பகல் என பாராமல் காலை 6 மணிக்கு புலியின் காலடி தடத்தை கண்டு பின்தொடர்வார்கள். அப்படி பின் தொடரும் போது, வனப் பகுதியில் காட்டு யானை, சிறுத்தை மற்றும் மற்ற புலிகளும் இடையில் குருக்கிடும். அதையும் மீறி தங்களது உயிரையும் பணயம் வைத்து, ஆட்கொல்லி புலியின் கால் தடத்தை கண்டு பின் தொடர்வார்கள். மேலும் இவர்கள் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க மரத்தின் மீது அமர்ந்து பல மணி நேரம் அமர்ந்திருந்து கண்காணித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதியான T23 புலியின் தேடுதல் வேட்டையின் 21 -வது நாளான அன்று மசினகுடி வனப்பகுதியில் கண்ட வேட்டை தடுப்பு காவலர்கள் குழு, புலியை பின் தொடர்ந்தனர்.

    அப்போது புலியின் இருப்பிடத்தின் அருகில் மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்த சீனிவாசன் மற்றும் உதயன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, புலி பதுங்கியிருக்கும் இடத்திற்கு சென்றது. இதில் உதயன் கும்கி யானை மிகவும் துணிச்சலாக புலியை எதிர் கொண்டது. இதனால் உதயன் கும்கி யானை மேலிருந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆட்கொல்லி புலி மீது மயக்க ஊசி செலுத்தினார். ஆத்திரமடைந்த புலி ஆக்ரோஷமாக தாக்க வந்தது. இருப்பினும் கும்கி யானையின் பாகன் சுரேஷ் சற்றும் பயப்படாமல் யானையை முன்னோக்கி செலுத்தினர்.

    உடனே மயக்கத்தில் புலி புதருக்குள் மறைந்தது. புதருக்குள் மறைந்த புலியை வேட்டைத் தடுப்பு காவலர்கள் வலையில் சிக்க வைத்து கூண்டில் உயிருடன் பிடித்தனர். புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்பு காவலர்களின் பணி மிகவும் உன்னதமானது. இவர்களுக்கு தமிழக அரசு நிரந்தர பணி வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும் நீலகிரியில் இதுவரை இது போன்ற 3 புலிகளையும் சுட்டு கொன்றுள்ளோம் எனவும், இந்த புலியை உயிரோடு பிடித்தது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இந்தியாவில் மலையேற்ற பயிற்சி பெற்ற வீரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஆதிவாசி இளைஞர்களை கொண்டு மலையேற்ற பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: