• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T23 புலியை பிடிக்க 12வது நாளாக தேடுதல் முயற்சி!

T23 புலியை பிடிக்க 12வது நாளாக தேடுதல் முயற்சி!

புலி

புலி

புலியை பிடிப்பதற்காக 2 மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மூன்று இடங்களில் அதனை கட்டி வைக்க முடிவு செய்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாட வரும் போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். 

  • Share this:
    கடந்த 11 நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த மசினகுடி T23 புலியை மயக்க ஊசி செலுதி பிடிக்க இன்று 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரைந்தனர் .

    நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சுறித் திரியும் ஆட்கொல்லி புலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 4 மனிதர்களையும் கொன்றுள்ளது.    4 வனகால்நடை மருத்துவகுழு மற்றும் 50-க்கு மேற்ப்பட்ட வனத்துறையினர் சிங்காரா மற்றும் மசினகுடி வனப்பகுதியில் T23 என்னும் புலியை தேடி வருகின்றனர்.

    நேற்று மாலை சிங்காரா வனப்பகுதியில் புலியின் கால் தடத்தை கண்ட வனத்துறையினர் அப்பகுதியில் 4 இடங்களில் பரண் அமைத்துள்ளனர்.

    மேலும் புலியை பிடிப்பதற்காக 2 மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மூன்று இடங்களில் அதனை கட்டி வைக்க முடிவு செய்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாட வரும் போது பரண் மீது அமர்ந்துள்ள வனகால்நடை மருத்துவர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.25,000 விலை போகும் சிப்பிப் பாறை நாய்களின் சிறப்புகள் என்ன?


    ஒவ்வொரு பரணிலும் ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மயக்க ஊசி தயாராக உள்ளது. புலியின் கால் தடம் மற்றும் 50- இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புலியை சுட்டுப்பிடிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: