ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மசினக்குடி புலிக்கு ஏன் MT23 என பெயர் வைத்தார்கள்?.. அதை பிடிக்க ஏன் இவ்வளவு போராட்டம்

மசினக்குடி புலிக்கு ஏன் MT23 என பெயர் வைத்தார்கள்?.. அதை பிடிக்க ஏன் இவ்வளவு போராட்டம்

புலி

புலி

மசினகுடி பகுதியில் புலியை தேடும் பணி அதன் காலடி தடங்களை கொண்டு நடைபெறுகின்றது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றான , 13 வயதுடைய MT 23 என்ற புலி கால்நடைகளையும், மனிதர்களையும் கொன்றதால் அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த பகுதியில் மட்டும் சுமார்

  90 புலிகள் வரை இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் வசிக்கும் MT23 என்ற புலியானது கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம்தேதி மசினகுடி பகுதியில் வன எல்லையின் அருகே கால்நடை மேய்த்து கொண்டு இருந்த மாதன் என்பவரின் மனைவி கெளரியை அடித்து கொன்றது.

  இதனையடுத்து இந்த ஆண்டு 2021 ஜூலை 19ம் தேதி கூடலூர் அருகே மண்வயல் கிராமத்தை சேர்ந்த குஞ்சுகிருஷ்ணன் என்பவர் வன எல்லையில் கால்நடை மேய்து கொண்டு இருந்தபோது அடித்து கொன்றது.இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை என்ற இடத்தில் வன எல்லையில் கால்நடை மேய்த்து கொண்டு இருந்த சந்திரன் என்பவரை MT23 புலியானது அடித்து கொன்றது.(மண்வயல் கிராமத்திற்கும் தேவர் சோலைக்கும் இடையே 3 கி.மீ தூரம். ஒன்றரை மாத இடைவெளியில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது)

  இதனையடுத்து செப்டம்பர் 24 ம் தேதி பொதுமக்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து MT23 புலியை கூண்டு வைத்து பிடிப்பதாக வனத்துறை தெரிவித்தனர்.

  செப் 25 - MT 23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க , தேடுதல் பணி யானது தேவர்சோலை பகுதியில் துவங்குகின்றது. 3 மருத்துவர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை துவங்கினர். அன்றைய தினமே தேவர் சோலை பகுதியில் ஒரு மாட்டை MT23 புலி அடித்து கொன்றது

  செப் 26- தேடுதல் பணியின் போது தேவன் எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் புலி தென்பட்டது. ஆனால் புலியை பிடிக்க இயவில்லை

  செப் 27 - தேடுதல்பணியின் போது தேயிலை தோட்டத்திற்குள் தென்பட்டது. ஆனால் அப்பொழுதும் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை

  செப் 28 - மே பீல்டு தேயிலை தோட்னத்தில் தேடுதல் பணியில் புலி தென்படுகின்றது.ஆனால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை

  செப் 29 - தேயிலை தோட்டத்திற்குள் தேடுதல் பணியில் புலி தென்படுகின்றது.

  செப் 30 - தேடுதல் பணிக்கு உதவியாக கும்கியானை கொண்டு வரப்படுகின்றது. தேடுதல் பணியில் புலி தென்பட வில்லை

  அக்டோபர் 1 - MT23 புலி தேவர் சோலை ,தேவன் எஸ்டேட் பகுதியில் பகுதியில் தமிழக, கேரள வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து 21 கி.மீ வனப்பகுதியில் பயணித்து மசினகுடி வனப்பகுதிக்கு புலி வருகின்றது. புலி மசினகுடி வனப்பகுதிக்குள் நுழைவதை வனத்துறையினர் பின் தொடர்ந்தனர். அதே தினத்தில் மசினகுடி அருகே குறும்பர்பாடி பகுதியில் வன எல்லையில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த மங்களபசுவன் என்பவரை MT23 அடித்து கொன்று உடல் பாகங்களை தின்றது.1 ம் தேதியே மக்கள் மசினகுடி மக்கள் புலியை பிடிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்

  அக்டோபர் 2 - மசினகுடி பகுதியில் பதுங்கி இருக்கும் புலியின் காலடி தடங்கள் பார்க்கப்படுகின்றது. ஓரே இடத்தில் 4 புலிகள் இருந்ததால் அதை சுடும் முயற்சி நிறுத்தப்பட்டது

  அக்டோபர் -3 மசினகுடி வனப்பகுதியில் புலியின் தடயங்களை வைத்து வனத்துறையினர் பின் தொடர்கின்றனர். புலி தென்படுகின்றது. ஆனால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை

  அக்டோபர் - 4 மசினகுடி பகுதியில் புலியை தேடும் பணி அதன் காலடி தடங்களை கொண்டு நடைபெறுகின்றது.

  அக்டோபர் 5 - மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் T23 புலியின் நடமாட்டம் இருப்பது தெரிகின்றது.டிரோன் கேமரா மூலமும், காலடி தடங்களை கொண்டும் தேடுதல் பணியானது நடைபெற்றது.

  அக்டோபர் 6 - சிங்காரா வனப்பகுதியில் 4 பரண்கள் அமைத்து புலியை கண்காணிக்கும் பணி நடத்தப்படுகின்றது.தற்போது வரை புலியை பிடிக்க முடியாத சூழல் நிலவுகின்றது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Forest, Forest Department, Masinagudi, Nilgiris, Tiger