ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக்கில் ஒயின் வேட்டை நடத்திய எலிகள்.. ஊழியர்கள் அதிர்ச்சி

டாஸ்மாக்கில் ஒயின் வேட்டை நடத்திய எலிகள்.. ஊழியர்கள் அதிர்ச்சி

எலிகள் சேதப்படுத்திய ஒயின் பாட்டில்கள்

எலிகள் சேதப்படுத்திய ஒயின் பாட்டில்கள்

எலிகள் ஒயின்களை ருசி பார்த்தது கூடலூர் பகுதியில் பெறும் பேசு பொருளாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கூடலூர் பகுதியில் ஊடங்கு முடிந்து இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் ஒயின் பாட்டில் மூடிகளை உடைத்து   ருசிபார்த்த எலிகள்..

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடிந்து பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் முக்கியமாக குடிமகன்களில் பெரும் எதிர்பார்பான மது கடையும்  அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டது.

Also Read: கொரோனா வந்துருச்சின்னு வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன புருஷன்.. விடாமல் போலீசிடம் சிக்கவைத்த மனைவி

இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள காலம்புழா பகுதியில் இரண்டு மாதத்திற்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுபான கடைகள்  நேற்று திறக்கப்பட்டது. மதுகடைகளை திறந்த ஊழியர்கள் கடையை சுத்தம் செய்து மதுபாட்டில்களின் எண்ணிகை சரியாக உள்ளதா என சரிபார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது அங்கு அடுக்கி வைத்திருந்த 12  ஒயின் பாட்டில் மூடிகளை உடைந்து சரிந்த நிலையில் கிடந்ததுள்ளது.  பின்னர் எலிகளின்  எச்சம் போன்றவற்றை அங்கு  இருந்ததால் எலிகள் மூடியை உடைத்து ருசி பார்த்திருக்கலாம் என்று கடையின் மேலாளரும் விற்பனையாளரும் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் மதிப்பு சுமார் 2000 ரூபாய்க்கு மேல்  இருக்குமென்றும் தெரிவித்துள்ளனர். எலிகள் ஒயின்களை ருசி பார்த்தது கூடலூர் பகுதியில் பெறும் பேசு பொருளாக உள்ளது. மேலும் கூடலூர் பகுதியில் தளர்வுகள் அறிவித்த நிலையில் ஆட்டோ ஓடத்தொடங்கியது.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Tasmac, Wine