Hyena | மசினகுடி வன பகுதியில் சுற்றி திரியும் ஐனா எனபடும் அரிய வகை கழுதை புலிகள்...

ஐனா

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வன பகுதியில் முதல் முறையாக ஐனா எனபடும் அரிய வகை கழுதை புலிகள் தென்பட்டு இருப்பது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது |

  • Share this:
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனத்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக வன விலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி - ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சீகூர் மற்றும் தெங்குமரஹாடா வன பகுதியில் மட்டுமே வாழ்ந்து வரும் ஐனா எனபடும்  அரிய வகை கழுதை புலி முதல் முறையாக மசினகுடி வன பகுதியில் தென்பட்டுள்ளது. Striped hyena என்று அழைக்கபடும் இந்த அரிய வகை கழுதை புலி மசினகுடியிலிருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே தென்பட்டுள்ளது.

    அதனை கண்காணிக்கும் விதமாக பொறுத்தபட்டுள்ள நவீன கேமராக்களில் 5-க்கும் மேற்பட்ட முறை பதிவாகி உள்ளது. அதில் ஒரு ஜோடி கழுதை புலிகள் பதிவாகி உள்ளது. 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சீகூர் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெங்குமரஹாடா வன பகுதியில் 13 கழுதை புலிகள் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் படிக்க...தருமபுரியில் உள்ள அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்... நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

    பொதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனபகுதியில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட  இந்த அரிய வகை கழுதை புலிகள் தற்போது பொதுமக்கள் அதிகமாக வாழும் மசினகுடி வன பகுதியில் வாழ தொடங்கி இருப்பது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அந்த கழுதை புலிகளை மசினகுடி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: வில்லியம் ஜார்ஜ், ஊட்டி 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: