மசினகுடியில் வனத்துறையினரை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை கழுதை புலி மரணம்!

அரிய வகை கழுதைப் புலி

Striped hyena என்று அழைக்கப்படும் இந்த அரிய வகை கழுதை புலிகள் மசினகுடியிலிருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே தென்பட்டது

 • Share this:
  நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த வன பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ள நிலையில் நீலகிரி - ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சீகூர் மற்றும் தெங்குமரஹாடா வன பகுதியில் மட்டுமே வாழ்ந்து வரும் ஐனா எனபடும் அரிய வகை கழுதை புலிகள் கடந்த மாதம் முதல் முறையாக மசினகுடி வன பகுதியில் தென்பட்டது.

  Striped hyena என்று அழைக்கபடும் இந்த அரிய வகை கழுதை புலிகள் மசினகுடியிலிருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே தென்பட்டது. பொதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனபகுதியில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட  இந்த அரிய வகை கழுதை புலிகள் பொதுமக்கள் அதிகமாக வாழும் மசினகுடி வன பகுதியில் வாழ தொடங்கி இருப்பது வனத்துறையினரிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் இன்று காலை மசினகுடி அருகே ஆச்சக்கரை சாலை ஓரத்தில் ஆண் கழுதை புலி இறந்து கிடப்பது கண்டு பிடிக்கபட்டது.

  Also Read:   காவல்நிலையத்தில் கட்டி வைட்து அடித்தனர்: காவலர்களின் மிருகத்தன தாக்குதலை விவரிக்கும் காய்கறி விற்பனையாளர்!

  அதனை மீட்ட வனத்துறையினர் புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பிரேத பிசோதனை செய்தனர். அதில் இறந்த கழுதை புலிக்கு சுமார் 8 வயது இருக்கும் என்பதும் வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்யபட்டு வருகிறது.

  ஜார்ஜ் வில்லியம்ஸ் - நீலகிரி செய்தியாளர்
  Published by:Arun
  First published: