Home /News /tamil-nadu /

குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மழை: மரங்கள் சாய்ந்ததால் 3 இடங்களில் போக்குவரத்து தடை!

குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மழை: மரங்கள் சாய்ந்ததால் 3 இடங்களில் போக்குவரத்து தடை!

குன்னூர்

குன்னூர்

'டவ்-தே' புயலால், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக முக்கிய சாலையில் 3 க்கும் மேற்பட்ட  இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

    அரபிக் கடலில் உருவான  'டவ்டே' புயலாக காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில்  மழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் , உதகை, கூடலூர்  சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதை  மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் 3 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து சற்று நேரம் பாதித்தது .

    இதே போல்  மாவட்டத்தில் 10-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் சாாலையிலும்,  வீடுகள் மீீதும் விிழுந்த மரங்களை உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர்.பின்னர் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீரானது.
    இதுவரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்ப்படவில்லை.. சாரல் மழை காரணமாக கடுங்குளிரும் நிலவி வருகிறது.

    இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயலால், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு டவ் - தே என வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

    டவ் - தே புயலானது நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ம் தேதி, டவ் - தே புயல் குஜராத் கடல் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊட்டி செய்தியாளர் வில்லியம்ஸ்
    Published by:Arun
    First published:

    Tags: Coonoor Constituency, Cyclone, Heavy rain, Weather

    அடுத்த செய்தி