• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்பு

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்பு

ராம்நாத்  கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தங்கியுள்ளார்.

  • Share this:
    நீலகிரி சென்றடைந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    கடந்த திங்களன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதைதொடர்ந்து, சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துடன் உதகைக்கு வந்தார். அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    Also read : கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்

    இதையடுத்து, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, பயிற்சியில் உள்ள அதிகாரிகளுடன், அவர் கலந்துரையாட உள்ளார்.

    இதற்கான பயணத்தின்போது, அவர் ஒரு பழங்குடியினர் கிராமம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலையைப் பார்வையிட உள்ளார். இதனிடையே, குடியரசு தலைவரின் வருகையையொட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: