ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு..! அதிமுக நிர்வாகியின் அண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு..! அதிமுக நிர்வாகியின் அண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

அ.தி.மு.க நிர்வாகி அண்ணன்

அ.தி.மு.க நிர்வாகி அண்ணன்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக இன்றும் தீவிர விசாரணை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக நிர்வாகியும் பிரபல மர வியாபரியுமான சஜீவனிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அவரது அண்ணன் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடர்பாக நேற்றும் நேற்று முன்தினமும் அதிமுக வர்த்தக அணி நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலிசார் ஐ.ஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையானது நேற்று 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று சஜீவனின் அண்ணன் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது இன்று காலை பதினோரு மணி அளவில் தொடங்கியது. இதில் தனிப்படை போலீசார் ஐஜியின் மேற்பார்வையில் கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணையைத்  தீவிரப்படுத்தியுள்ளனர். இப்படி நடைபெற்ற விசாரணையானது மாலை ஆறு  மணி அளவில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சிபி விசாரணை முடிந்து பிஆர்எஸ் வளாகத்திலிருந்து வெளியே சென்றார்.

First published: