• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பில்லூர் அணை திறப்பு : பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை திறப்பு : பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணை

பில்லூர் அணை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

  • Share this:
    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்து பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை பில்லூர் அணைக்கு வினாடிக்கு2,200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 86 அடியிலிருந்து 91 அடியாக உயர்ந்தது. அணையில் மின் உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.

    இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 91 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்தது. மீண்டும் மின் உற்பத்திக்காக இரண்டு எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.

    தொடர் மழை காரணமாக அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    Must Read : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    செய்தியாளர் - யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: