Home /News /tamil-nadu /

குளிரும் ஊட்டியில் குறும்பட விழா.. 32 நாடுகளை சார்ந்த 118 குறும்படங்கள் திரையிடல்

குளிரும் ஊட்டியில் குறும்பட விழா.. 32 நாடுகளை சார்ந்த 118 குறும்படங்கள் திரையிடல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உதகையில் 3 நாள் சர்வதேச குறும்பட விழா தொடங்கியது.முதல் முறையாக தோடர், படுகர் இன மக்களின் குறும்படங்களும் போட்டியில் பங்கேற்றுள்ளன. 

தேசிய அளவிலான சிறந்த குறும்படங்கள் மற்றும் ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட 32 நாடுகளை சார்ந்த குறும்படங்கள் என 118 குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான உதகையில் உள்ள ஊட்டி குறும்பட சங்கத்தின் சார்பாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான குறும்பட விழா நடத்தபட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 3-வது குறும்பட விழா இன்று தொடங்கியது. உதகையில் உள்ள நூற்றாண்டு பழமையான அசம்பலி திரையரங்கில் நடைபெறும் இந்த விழாவை நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் எஸ்.பி.அம்ரித் தொடங்கி வைத்தார். 3 நாள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட தேசிய அளவிலான சிறந்த குறும்படங்கள் மற்றும் ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட 32 நாடுகளை சார்ந்த குறும்படங்கள் என 118 குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

Also Read: Omicron : கேன்சல் ஆகும் டிக்கெட்டுகள்... சுற்றுலாத் துறையில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது ஒமைக்ரான்

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் எழுத்து வடிவம் இல்லாத படுகர் இன மக்களின் குறும்படமும், தோடர் பழங்குடியின மக்களின் குறும்படமும் அவர்களது மொழியிலேயே திரையிடப்படுகிறது. இந்த குறும்படங்களை திரையரங்கில் வந்து பார்க்க எந்த கட்டணமும் கிடையாது.  ஞாயிற்றுகிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் 118 குறும்படங்களில் சிறந்த குறும்படம், சிறந்த இயக்குனர், ஒளிபதிவாளர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் யானை விருதுகள் வழங்கபடுகிறது.

அத்துடன் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சிறந்த படைப்பாளர்களுக்கு முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய ஜான் சலிவன் பெயரிலும் விருது வழங்கபட உள்ளது. திரையிடப்படும் ஒவ்வொரு குறும்படமும் 30 நிமிடத்திற்கு மிகாமல் உள்ளன. அவற்றை காண ஏராளமானோர் திரையரங்கிற்கு வர தொடங்கி உள்ளனர்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Movie, Ooty, Short film

அடுத்த செய்தி