• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில்

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் 7:10 மணிக்கு  மலை ரயில் புறப்பட்டுச் சென்றது

  • Share this:
    மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி முடிவடைந்தது 2 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு செய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்,  ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

    ரயில் பாதையின் குறுக்கே விழுந்துகிடந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. மலை ரயிலில் பயணம் செய்ய காலை முதலே சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் 7:10 மணிக்கு  மலை ரயில் புறப்பட்டுச் சென்றது .மலை ரயில் புறப்பட்டதும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். 180 சுற்றுலா பயணிகள்  மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தியாளர்: யோகேஷ்வரன்
     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: