முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா வார்டில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி அசத்தும் செவிலியர்!

கொரோனா வார்டில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி அசத்தும் செவிலியர்!

படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் ஆடும் செவிலியர்

படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் ஆடும் செவிலியர்

செவிலியர் ஒருவர் PPE கிட் உடை அணிந்தவாறு, படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கேற்ப நடனமாடி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கு ஏற்ப நடனமாடி அவர்களது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செவிலியர். 

கொரோனா  இரண்டவது அலை தமிழகத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது மேலும் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள கே.பி.எஸ். என்ற தனியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு அதில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதில் தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை போக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் யோகா பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் செவிலியர்கள் நடனமாடி அவர்களது மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டுப்பாளையம் கேபிஎஸ் தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில்  தற்போது 10 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை மையத்தில் செவிலியர் ஒருவர் PPE கிட் உடை அணிந்தவாறு, படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கேற்ப நடனமாடி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அவருடன் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் சிலரும் நடனமாடி மகிழ்ந்தனர்.  இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை வெளி உலகிற்கு வெளிச்சம் காட்டியுள்ளது.

செய்தியாளர்  எஸ்.எஸ். யோகேஷ்வரன் -  மேட்டுப்பாளையம்

First published:

Tags: Coimbatore, COVID-19 Second Wave, Mettupalayam, Nilgiris