கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகத்திலேயே நீலகிரி முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகத்திலேயே நீலகிரி முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

இன்னசென்ட் திவ்யா

கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகத்திலேயே நீலகிரி முதலிடத்தில் உள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டாலும், பொது மக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடை பிடிக்க வேண்டும் என்றார்.

அதோடு மட்டுமல்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும்  தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டமானது கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்றார். மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் 5 கோவிட் சென்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் 110 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளோடு உள்ளது என்றார்.

மேலும் தற்போது 9 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே மாவட்டத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் பொதுமக்களிடையே தொடர்பில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் உழியர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும், தற்போது வரை அக்ஸிஜன் தட்டுபாடு மாவட்டத்தில் இல்லை எனவும், தேர்தல் முடிவு அறிவிக்கும் மையத்திற்க்கு வரும் அனைவரும் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: