ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விநாயகர் சதுர்த்தி விழாவில் மணியடித்து பூஜை செய்த முதுமலை யானைகள்..

விநாயகர் சதுர்த்தி விழாவில் மணியடித்து பூஜை செய்த முதுமலை யானைகள்..

யானைகள்

யானைகள்

முதுமலை முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சுற்றுலா பயணிகள் புடைசூழ யானைகள் விநாயகர் கோவிலில் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்ய வலம் வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் சுமார் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் முன்னிலையில் யானைகள் பூஜையுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Also Read: மதநல்லிணக்க விநாயகருக்கு சதுர்த்தி விழா: மும்மதத்தினர் கலந்துகொண்டு வழிபாடு!

விநாயகர் சதுர்த்தி விழாவில் யானைகள் முகாமில் உள்ள 12க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டன. முன்னதாக யானைகளை மாயாற்றில் குளிக்கச்செய்து அலங்காரங்கள் செய்து மாலை அணிவித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.   பின்னர் இங்குள்ள விநாயகர் கோவிலில் மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு யானைகள் கோவிலை சுற்றி மணியடித்து வந்து பூஜை செய்து மண்டியிட்டு கோவிலில் வணங்கின.

இதனைத் தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் சிறப்பு உணவுகளான பழங்கள், கரும்பு, வெல்லம், பொங்கல் ஆகியவற்றுடன் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.      முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.   யானைகள் பூஜை செய்யும் நிகழ்ச்சி மற்றும் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் முதுமலையில் யானைகள் முகாமில் யானைகள் மணியடித்து பூஜை  செய்யும் நிகழ்ச்சி தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். முகாமிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Elephant, Ganesh Chaturti, Ganesh idols, News On Instagram, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி