உதகையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களை கண்காணிக்க தனி மருத்துவர் - அமைச்சர் உத்தரவு

முகாமில் அமைச்சர் ராமச்சந்திரன்

முகாம்களில் தங்கியுள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா ஊசி செலுத்த அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

 • Share this:
  பந்தலூர் மற்றும் கூடலூரில் பெய்த கனமழையால் ஐந்து இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியின  மக்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. தனியாக மருத்துவர்களை நியமித்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர்கள் கண்காணிப்பு.

  நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கூடலூர் , பந்தலூர் , அப்பர் பவானி அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.உதகை, குன்னூர்,  கோத்தகிரி போன்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதனால்  அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு , தீயணைப்புத் துறையினர் , காவல் துறையினர் , நெடுஞ்சாலைத்துறையினர் போன்ற அரசுத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. பந்தலூர் , கூடலூர் போன்ற பகுதிகளில் மட்டும் தாழ்வான பகுதிகளில் இருந்த அத்திப்பாளி, அல்லூர்வயல், புத்தூர் வயல் பகுதிகளிலுள்ள பழங்குடினர் கிராமத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பு கருதி. தொரப்பள்ளி , புத்தூர்வயல் , பந்தலூர், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் மழையால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் மக்களை வைத்துள்ள முகாம்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு தங்கியிருந்த மக்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வனத்துறை அமைைச்சர், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெள்ளம் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

  அத்துடன் அவர்களுக்கு கொரோனா ஊசி செலுத்த உத்தரவிட்ட அமைச்சர் ராமச்சந்திரன்.  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களை கண்காணிக்க தனி மருத்துவரை நியமித்து உத்தரவிட்டார்.

  ஊட்டி செய்தியாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்
  Published by:Arun
  First published: