• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாயமான T23 புலி.. 8 நாள்களுக்கு பின் சிசிடிவி கேமராவில் சிக்கியது - வனப்பகுதியில் தேடுதல் வேட்டை

மாயமான T23 புலி.. 8 நாள்களுக்கு பின் சிசிடிவி கேமராவில் சிக்கியது - வனப்பகுதியில் தேடுதல் வேட்டை

புலி

புலி

சிசிடிவி கேமராவில் பதிவான ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் தேவர்சோல,  மேபீல்டு பகுதிக்கு விரைந்துள்ளனர்.

  • Share this:
ஆட்கொல்லி புலி 8 நாட்களுக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா பகுதியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன், மசினகுடி பகுதிகளில் 4 பேரை பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 18 நாட்களாக கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் கடந்த 5 நாட்களாக புலியின் கால் தடங்கள் தெரியாமல் சிங்கார வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் புலியை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் ஏமாற்றமடைந்தனர்.

Also Read:  காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்

இதனையடுத்து நேற்று முதல் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மற்றும் மாயார் பகுதிகளில்  நான்கு குழுக்கள் அந்த இரண்டு வனப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள முட்புதர்கள் போன்றவை மட்டுமின்றி மூங்கில் புதர்களிலும் தேடுதல் வேட்டையில்  இறங்கினர்.

சிங்கார வனப்பகுதி மற்றும் அங்கிருந்து கூடலூர் செல்லும் சாலை முழுவதும் 65 இடங்களில் தானியங்கி சென்சார் கேமராக்களில் இந்த புலி பதிவாகாத நிலையில் வேறு இரண்டு புலிகள் மட்டுமே பதிவாகி உள்ளது உறுதியானது. இதனையடுத்து தற்போது  மாயார் மற்றும் பொக்காபுரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

Also Read:  பணமே இல்ல.. இந்த வீட்ட எல்லாம் எதுக்கு பூட்டுறீங்க  – கலெக்டருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற  திருடர்கள்

இந்நிலையில் T23 புலியானது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா  பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி தெப்பகாடு, முதுமலை வழியாக போஸ்பாரா வன பகுதிக்கு சென்றுள்ளது. போஸ்பாரா பகுதியில் வைக்கபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று இரவு T23 புலி பதிவாகி உள்ளது. அதனை பிடிக்க வனத்துறையினர் தேடி வந்தனர். ஆனால் தற்போது அந்த புலி மீண்டும் தேவர்சோல,  மேபீல்டு பகுதியை நோக்கி செல்வதால் அதனை பிடிக்க வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: