• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மசினகுடியில் உலாவும் ஆட்கொல்லி புலி.. சுட்டுக்கொல்ல உத்தரவு - தேடுதல் வேட்டையில் இரண்டு மாநில வனத்துறை

மசினகுடியில் உலாவும் ஆட்கொல்லி புலி.. சுட்டுக்கொல்ல உத்தரவு - தேடுதல் வேட்டையில் இரண்டு மாநில வனத்துறை

புலி

புலி

மசினகுடி மற்றும் கூடலுரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க அதிரடிப்படையினர் தயார். 20 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரிந்து புலியை சுட திட்டம்.      

  • Share this:
மசினகுடி மற்றும் கூடலுரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க அதிரடை படையினர் தயார். 20 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரிந்து புலியை சுட திட்டம்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு  புலி ஒன்று அப்பகுதியை சேர்ந்த கெளரி என்ற பெண்ணை அடித்து கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன்,  சந்திரன் ஆகிய இருவரையும்  அடித்து கொன்றது.  இதை தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இந்நிலையில் இந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து 3 வன கால்நடை மருத்துவ குழு மற்றும் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த 7 நாட்களாக ஆட்கொல்லி புலி வனத்துறையினருக்கு பல முறை தென்பட்ட போதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

Also Read: மசினக்குடி அருகே 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

இந்நிலையில் நேற்று இந்த ஆட்கொல்லி புலி தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மசினகுடி பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினர்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மசினகுடி பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டனர். இந்நிலையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில்  கால்நடை  மேய்துக்கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்து கொன்றது. இதனைதொடர்ந்து புலியை சுட்டு பிடிக்க கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . பின்னர் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு ஆணையை  காண்பித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.

மசினகுடி பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல பிரத்யேக பயிற்ச்சி பெற்ற ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.  காலை 20 பேர் ஐந்து குழுக்களாக பிரிந்து புலியை கண்டவுடன் சுட்டு கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் காலை 2 மணி நேரம் மசினகுடி சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது. புலியை சுட்டு பிடிக்கும் வரை பொது மக்கள் வன பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்கொல்லி புலியை  தேட 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். முதன் முறையாக அதவை என்னும் மோப்பநாய் புலியை தேட வந்துள்ளது. இந்த பணியில் நீலகிரி வனத்துறை, கேரள வனத்துறை, அதிரடிப்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க 20-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் தயார் நிலையில் இருப்பினும், அதே இடத்தில் 4 புலிகளின் நடமாட்டம் உள்ளதால் மாற்று புலியை சுடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்கொல்லி புலியின் புகைப்படத்தை காண்பித்து அதன் அடையாளங்களை வைத்து சரியான புலியை சுட அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: