கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 3 வேளை உணவளிக்கும் ஜெயின் சமூக இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு!

ஜெயின் சமூக இளைஞர்கள்

சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்கும் இந்த இளைஞர்கள் தங்களது வாகனங்களில் எடுத்து சென்று வீடு வீடாக வினியோகம் செய்து வருகின்றனர்.

 • Share this:
  உதகையில் தனிமைபடுத்தபட்ட பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்டோருக்கு தினந்தோறும் 3 வேளையும் உணவு அளித்து உதவி வரும் ஜெயின் சமூக இளைஞர்கள். அரசு மருத்துவமனைகளுக்கும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதில் உதகை நகரில் தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டுள்ளவர்களும், தொற்றால் வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டவர்களும் உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

  அவ்வாறு உணவு கிடைக்காமல் பாதிக்கபட்ட 350-க்கும் மேற்பட்டோருக்கு ஜெயின் சமூகத்தை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் தினந்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் உணவுகளை வழங்கி உதவி வருகின்றனர்.

  சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்கும் இந்த இளைஞர்கள் தங்களது வாகனங்களில் எடுத்து சென்று வீடு வீடாக வினியோகம் செய்து வருகின்றனர். அத்துடன் உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் உணவு வழங்கி வருகின்றனர். அவர்களை உதகை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  நீலகிரி செய்தியாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்
  Published by:Arun
  First published: