• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊட்டியில் இடி, மின்னலுடன் கன மழை : வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

ஊட்டியில் இடி, மின்னலுடன் கன மழை : வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

ஊட்டியில் கன மழை

ஊட்டியில் கன மழை

நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், 50-க்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

  • Share this:
நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கன மழை  பெய்தது இதனால், 50-க்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது. அதன் படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் கன மழை கொட்டி வருகிறது.

குறிப்பாக நேற்று மாலை உதகையில் கன மழை தொடர்ந்து பெய்தது.  உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடாலூர், குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது.

உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் 4 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த கன மழையால் காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் 50-க்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்குளும் நகராட்சி சந்தைக்குளும்  மழை நீர் புகுந்தது.

Must Read : மீண்டும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பேருந்து நிலைய சாலையில் தண்ணீரில் சிக்கிய வாகனங்களை  தீயணைப்பு துறையினர் மீட்டனர். கன மழையின் காரணமாக சாலைகளால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இடைவிடாது பெய்த  கன மழையால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: