ஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர்! பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க நீலகிரியில் புது முயற்சி

சுற்றுலா வரும் பயணிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பரலியார், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்கள் மூலம் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர்! பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க நீலகிரியில் புது முயற்சி
தண்ணீர் ஏடிஎம்
  • News18
  • Last Updated: August 5, 2019, 10:51 PM IST
  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அண்மையில் பிளாஸ்டிக் ஒழிக்கும் விதமாக பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து ஒரு புதிய முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது.


சுற்றுலா வரும் பயணிகளுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பரலியார், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்கள் மூலம் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்க குடிநீர் தேவை என்றால் ஏடிஎம்மில் 5 ரூபாய் காயினை செலுத்தி ஒரு லிட்டர் தண்ணீரைப் பெற்று கொள்ளலாம் என்றும், இதன் மூலம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை முற்றிலும் தடுக்கமுடியும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்தார்.

Also watch: சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க! 
First published: August 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading