• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குன்னூர் மலைப்பாதையில் உருண்ட ராட்சத பாறைகள்.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர் மலைப்பாதையில் உருண்ட ராட்சத பாறைகள்.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ராட்சத பாறைகள்

ராட்சத பாறைகள்

குன்னூரில் சாலையில் விழுந்த ராட்சத பாறைகள்  அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
குன்னூரில் தொடர் மழை எதிரொலி இரவில் மலைப்பாதையில் உருண்ட நான்கிற்கும் மேற்பட்ட ராட்சத பாறைகள்  அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான பர்லியார், காட்டேரி, அருவங்காடு, வெலிங்டன் போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் நந்தகோபால் பாலம் அருகே  பெய்த மழை காரணமாக நான்கிற்கும் மேற்பட்ட ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பாறைகள் சாலையில் விழுந்த போது அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராதததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாறையை கம்ப்ரஸர் மூலம் உடைத்து அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாறைகள் சரியக்கூடும் என்பதால் சாலையின் ஓரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: