ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் குழப்பம்

நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் குழப்பம்

மசினக்குடியில் சுற்றித்திரியும் புலி

மசினக்குடியில் சுற்றித்திரியும் புலி

ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் முதன் முறையாக அதவை என்னும் மோப்பநாய் பயன்படுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் மற்றும் கேரள வனத்துறைபினர் சம்பவ மசினக்குடி வனப்பகுதிக்கு விரைந்தனர்.

  நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கெளரி என்ற பெண்ணை புலி அடித்துக்கொன்றது. மசினகுடியில் இருந்து கூடலூர்  நகர்ந்த புலி தேவன் எஸ்டேட் பகுதியில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரை கொன்றது. ஆட்கொல்லி புலிக்கு மனிதர்களும், கால்நடைகளும் பலியாவது தொடர்க்கதையானது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு அழுத்தம் தரும் விதமாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

  பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கு புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. வன கால்நடை மருத்துவக்குழுவினர் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். வனத்துறையினரின் கண்களுக்கு புலி தென்பட்டாலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்துறையினருக்கு போக்குகாட்டிவிட்டு புலி மறைந்துவிடுகிறது. இதற்கிடையில் புலி எஸ்டேட் பகுதியில் இருந்து மசினக்குடிக்கு வந்ததாக கூறப்பட்ட வேளையில் சிங்காரா வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த  மங்கள பசுவன் என்பவரை அடித்துகொன்றது. மசினக்குடி பகுதியில் உயிர் பலி அதிகரித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். புலியை சுட்டுப்பிடிக்க கோரி போராட்டம் செய்தனர். வனத்துறையினர் புலியை சுட்டுப்பிடிக்கும் உத்தரவை காட்டியதும் தான் அவர்கள் கலைந்து சென்றனர்.

  Also Read:  மசினகுடியில் உலாவும் ஆட்கொல்லி புலி.. சுட்டுக்கொல்ல உத்தரவு - தேடுதல் வேட்டையில் இரண்டு மாநில வனத்துறை

  வனத்துறை எச்சரிக்கை

  புலியை சுட்டுப்பிடிக்க ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் அதிரடிப்படையினர் தயார் நிலையில்  உள்ளனர். 20 பேர் ஐந்து குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல் 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். புலியை சுட்டு பிடிக்கும் வரை பொது மக்கள் வன பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  புலியை சுடுவதில் சிக்கல்

  முதன் முறையாக அதவை என்னும் மோப்பநாய் புலியை தேட வந்துள்ளது. இந்த பணியில் நீலகிரி வனத்துறை, கேரள வனத்துறை, அதிரடிப்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் உள்ள அதே இடத்தில் வேறு 4 புலிகளின் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். மாற்று புலியை சுடக் கூடாது என அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்கொல்லி புலியின் புகைப்படத்தை காண்பித்து அதன் அடையாளங்களை வைத்து சரியான புலியை சுட அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

  வனத்துக்குள் விரைந்த அதிரடிப்படை

  ஆட்கொல்லி புலி  நேற்று மங்கள பசுவன் என்பவரை கொன்ற இடத்தில் தென்ப்பட்டதால் அந்தப்பகுதிக்கு வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர். மோப்ப நாய் அதவை மற்றும் 3 கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் மற்றும் கேரள வனத்துறைபினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். புலியை கண்டவுடன் முதலில் மயக்க ஊசி செலுத்திய பின்னர் சுட்டு கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Forest, Forest Department, Masinagudi, Nilgiris, Tamilnadu, Tiger