நடமாடும் வாகனங்களில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் எச்சரிக்கை

தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன்

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யபடுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

 • Share this:
  முழு ஊரடங்கை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி வாகனங்களில் கொண்டு செல்லபடும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யபடுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி நடமாடும் காய்கறி வாகன விற்பனை இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் கலந்து கொண்டு 240 நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும் படிக்க...முழு ஊரடங்கு : திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் 1197 காவலர்கள்

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன்,  கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் கட்டாயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். மேலும் நடமாடும் வாகனங்களில் விற்பனைக்கு எடுத்து செல்லும் காய்கறிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட கூடுதலாக விற்பனை செய்பவர்களின் உரிமம் ரத்து செய்யபட்டு கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

  செய்தியாளர்: ஜார்ஜ், வில்லியம்ஸ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: