• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டு எல்லையின் கடைக்கோடியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் கொரோனா... உயிரை பணயம் வைத்து உதவும் மருத்துவர்

தமிழ்நாட்டு எல்லையின் கடைக்கோடியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் கொரோனா... உயிரை பணயம் வைத்து உதவும் மருத்துவர்

தொற்று பாதிக்கபட்ட ஆதிவாசி மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத் ஒற்றை ஆளாக போராடி சிகிச்சை அளித்து வருகிறார்.

  • Share this:
    நீலகிரி மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா பகுதி இருளர் இன ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றால் பாதிக்கபட்டவர்களை அங்கு பணியாற்றும் அரசு மருத்துவர் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் பரிசல் மூலம் காட்டாற்று வெள்ளத்தை கடக்க வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஆதிவாசி கிராமங்களில் தொற்று பரவாத நிலையில் இந்த ஆண்டு மின்னல் வேகத்தில் பரவி வருவதே முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக போதிய போக்குவரத்து வசதி கூட இல்லாத தென்குமரஹாடா பகுதியில் உள்ள அள்ளிமாயார், கல்லம்பாளையம், புதுகாடு ஆகிய கிராமங்களை சார்ந்த இருளர் இன ஆதிவாசி மக்களுக்கு தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

    நீலகிரி மாவட்ட எல்லையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்ட பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிக்கபட்டோரை அங்கு பணியாற்றி வரும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத் ஒற்றை ஆளாக போராடி சிகிச்சை அளித்து வருகிறார்.

    இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த கிராமங்களுக்கு அருகே ஓடும் மாயார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் குறைய 2-நாள் ஆகும் என்ற நிலையில் மருத்துவர் அருண்பிரசாத் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட ஆதிவாசி மக்களை வெள்ள பெருக்கை கூட பொருட்படுத்தாமல் பரிசல் மூலம் உயிரை பனையம் வைத்து ஆற்றின் மறுபகுதிக்கு அழைத்து சென்று அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

    அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் மாயார் ஆற்றை கடந்து அருகில் உள்ள பவானிசாகர் பகுதிக்கு அடர்ந்த வன பகுதி வழியாக சென்றடைய சுமார் 3 மணி நேரம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    செய்தியாளர்: வில்லியம்ஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: