கடன் தொல்லை - மனைவி, குழந்தைகளுடன் விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் புதுமந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

  • Share this:
உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை இரு பிள்ளைகள் என 4 பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

நீலகிரி மாவட்டம் உதகை அருகே  மார்லிமந்து என்னும் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42).இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார். இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உரவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால்  மாடு கத்துவதாகவும்  கூறியதின் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்க்கு வந்து பார்த்துள்ளார்.

Also Read: வாளுடன் வாட்ஸ் அப் வீடியோ: வாலிபர் கைது

சந்திரன் வீட்டு கதவு உள் தாழ் இட்டத்தால் சந்தேகமடைந்த நந்தகுமார் புதுமந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையின் உதவியோடு பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கயிறால் தூக்கிலிட்டு தொங்கிய நிலையிலும், மற்றும் அவர் மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுறை தள்ளியபடி அருகில் (கிரம் ஆக்சின்) பூச்சு கொல்லி மருந்து இருந்த நிலையில் இறந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

இதுகுறித்து நந்தகுமார் புதுமத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த புதுமந்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு  கடன் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இருப்பினும்  தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் புதுமந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  நான்கு பேரின்  உடல்களை கைப்பற்றி உதகை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் புதுமந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: